districts

img

பகத்சிங்கின் விடுதலைப் போராட்ட வரலாற்றை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அறந்தாங்கியில் கே.பாலபாரதி பேச்சு

அறந்தாங்கி, மார்ச் 23-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தினத்தை முன் னிட்டு ‘‘போதையற்ற தமிழ்நாடு படைப்போம்’’ என்ற முழக்கத்து டன் வாலிபர் சங்கம் சார்பில் சந்தை பேட்டை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் எஸ்.பாண்டிகெளதம் வர வேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பி னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர். கே.பாலபாரதி சிறப்புரையாற்றி னார்.  அப்போது அவர் பேசுகையில், ‘‘பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகி யோரின் விடுதலைப் போராட்ட வர லாறுகளை கற்றுக்கொள்வதிலும் அந்த வரலாறுகளை முன்னெடு ப்பதிலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் முயற்சி எடுப்பதில் இன்றைக்கு தேவைப்படுகிறது.  பகத்சிங் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டு சிறையில் இருந்த போது, அங்கிருந்த சுதந்திர போராட்ட வீரர்கள், 23 வயதில் மடிய  வேண்டுமா? மன்னிப்புப் கூட கேட்க  வேண்டாம். இதற்கு மேல் இப்படி  நடக்க மாட்டேன் என்று சொல்லுங் கள் என்றனர்.  ஆனால், பகத்சிங் மீண்டும், மீண்டும் என்னை தூக்கில் போட்டா லும் நாங்கள் பிறந்து வந்தேனும் என் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடுவேன் என்று உறுதியோடு சொன்னார்.  பகத்சிங்கின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் இன்றைக்கு  இருக்கக்கூடிய ஆட்சியாளர்களி டம் மதிப்பில்லை. சாவர்க்கர் அந்த மான் சிறையில் இருந்த பொழுது ஜன்னல் வழியாக புல்புல் பறவை யில் ஏறி இந்தியா வந்து சென்றார் என்று கதையளக்கிறார்கள். நாட்டின் விடுதலைக்காக சிறை யில் இருந்தார் என்றும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  வரலாறுகளை படித்து வரலாறு களை பேசக் கூடிய அரசியல் இன்றைக்கு நடக்கவில்லை. வர லாறுகளை திருத்தக் கூடிய அர சியல் நடக்கிறது. நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்தாரே பகத்சிங் அவருடைய வாழ்க்கை, ஏகாதி பத்தியம் ஒழிக்கப்படவேண்டும். இந்திய நாட்டில் விவசாயிகளின், தொழிலாளிகளின் ஆட்சி மலர வேண்டும். முழுமையான சுதந்திரம் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.  இளைஞர்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காததால் சமூக விரோத சக்திகளாக போதைக்கு அடிமையாகிறார்கள். இந்த இளை ஞர்களை ஒன்றுபடுத்தி முற்போக்கு சிந்தனையாளர்களாக கொண்டு வர வாலிபர் சங்கம் பகத்சிங் நினைவு நாளில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி, பொதுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தி கொண்டிருக்கிறது’’ என்று பேசினார்.  கூட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், வாலி பர் சங்க மாநில துணை தலைவர் பா.லெனின், மாவட்டச் செயலாளர் ஏ.குமாரவேல், ஒன்றியத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மக்கள் பாடகர் கோவன் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.