புதுக்கோட்டை, மார்ச் 19- அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுக் கோட்டை ரயில் நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளின் முதல் கட்டம் டிசம்பரில் நிறை வடையும் என்றார் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் பி. ஆனந்த். புதுக்கோட்டை ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் பி.ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள கலந்தறிதற்குரியர்களால் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அந்தப் பணிகள் ரயில்வேயால் ஆய்வு செய்யப்பட்டு படிப் படியாக பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக குறிப்பிட்ட அளவு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. தேவைக் கேற்ப அனுமதி பெற்று பணிகள் மேற் கொள்ளப்படும். புதுக்கோட்டை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளில் முதல் கட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும் என் றார்.