அறந்தாங்கி, மே 14 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி-புதுக் கோட்டை சாலையில், நக ராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. நகரில் உள்ள 27 வார்டுக ளிலும், தெருக்களை சுத்தம் செய்து குப்பைகள் இங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சனிக் கிழமை காலை நகராட்சி குப்பை கிடங்கிற்கும், பக்கத் தில் தனியார் பழைய பிளாஸ்டிக் கிடங்கிற்கும் இடையில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்து அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலின்பேரில் அறந்தாங்கி, ஆவுடை யார்கோவில் தீயனைப்பு துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத் தனர். சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ், நகராட்சி ஆணையர் லீமா சைமன் ஆகியோர் விசாரணை நடத்தி னர். மேலும் அறந்தாங்கி டிஎஸ்பி. தினேஷ்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வை யிட்டு வழக்குப் பதிந்து தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.