புதுக்கோட்டை, ஜூன் 19 - ஏழை, எளிய அடித்தட்டு மக்க ளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை யுடன், மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் அளித்துள்ள மனுவில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது: எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் மற்றும் மருத்துவர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு மனிதர்கள் வாழவே முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ள காலனி வீடுகளுக்குப் பதிலாக புதிய குடியி ருப்புகள் கட்டித்தர வேண்டும். மணல் மாட்டு வண்டி குவாரிகள் அமைத்து மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாது காக்க வேண்டும். காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டு வரும் சாமானிய மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழி வகுக்க வேண்டும். திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளிக் கும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை வளங்களை அழிக்கும் வித மாக விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நில வும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். கிராமங்கள் தோறும் பழுதடைந் துள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். நரிக்குறவர் காலனியில் வசித்துவரும் மக்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். வியாபாரிகள் கொள்ளையடிப் பதை அனுமதிக்காமல் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை முறைப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண் டும். புறம்போக்குகளில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு மனைப்பட்டாவும், இலவச வீடும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.