புதுக்கோட்டை, செப்.23 - பாஜகவினர் கடைப்பிடித்து வரும் வன்முறைப் போக்கை தமிழக அரசு முளை யிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் இரா.முத்தரசன். புதுக்கோட்டை யில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது: கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் பாஜக, நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களை எப்படியெல்லாம் சீர்குலைத்திருக்கிறது என்பதைத்தான் எங்கள் கட்சியின் அரசியல் தீர்மானத்தில் சொல்லியிருக்கிறோம். இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் ஒற்றுமை, ஒரு மைப்பாடு, மதச்சார்பின்மை அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும். அரசியல் சாசனத்தில் சொல்லியிருக்கும் மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய சொற் களை நீக்க வேண்டும் என பாஜக தலை வர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி நீதி மன்றத்துக்கு சென்றிருக்கிறார். அவர் பாஜக வின் குரலாகத்தான் நீதிமன்றத்தை நாடி யிருக்கிறார் என்றால் அந்தக் கட்சியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயமாக அவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட வேண்டும். திமுக துணைப் பொதுச் செயலர் ஆ.ராசா, சனாதன தர்மமாக என்ன சொல்லப்பட்டி ருக்கிறதோ அதனைத்தான் குறிப்பிட்டு பேசுகிறார். அந்தக் கருத்து தவறாக இருந் தால், சனாதன தர்மத்தை ஏற்கவில்லை என பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சொல்ல வேண்டும். அதைவிடுத்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக வன்முறை யைத் தூண்டுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. அதேபோலத்தான் விநாயகர் புராணத் தில் சொல்லப்பட்டிருக்கும் கதையை ஓரிடத்தில் குறிப்பிட்டுப் பேசினேன். உடனே எனது நாக்கை அறுக்க வேண்டும், தலையை வெட்ட வேண்டும் என்கிறார்கள். புராணக் கதை தவறு என்று சொல்ல மறுக் கிறார்கள். இவர்களின் வன்முறைப் போக்கை தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாட்டின் ஜனநா யக சக்திகள் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பாஜக அரசு கொடுத்த தேர்தல் உறுதி மொழிகளை நிறைவேற்றவில்லை. அதனை மறைப்பதற்காகத்தான் இதுபோன்ற வன் முறையைத் தூண்டும் வேலையைச் செய் கிறார்கள். காந்தி பிறந்த நாளில், அவரைக் கொன்ற கோட்சேவின் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த நீதிமன்றம் அனுமதிக்கிறது என்றால், நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். அதிமுகவில் தலைமைப் பதவிக்காக இங்கே சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனை வரும் நடிகர்கள் மட்டுமே. இவர்களை இயக்கும் இயக்குநர் தில்லியில் (பாஜக) இருக்கிறார். இவ்வாறு முத்தரசன் கூறினார். பேட்டியின்போது, மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், மாவட்டச் செயலர் த.செங்கோடன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.