புதுக்கோட்டை, ஜன.23- ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டியது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழா வில், ‘ஆசிரியர் மனசுத் திட்டம்’ மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கலந்துகொண்டார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, செயல் அலுவலர் காவியா மூர்த்தி, அரசு சிறப்பு வழக்கறிஞர் செந் தில்குமார், உளவியல் ஆலோசகர் மார்ட்டீன் ஆசிர்வாதம் உள்ளிட்டோர் பேசி னர். அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி வர வேற்க, துணைமுதல்வர் குமாரவேல் நன்றி கூறினார்.