புதுக்கோட்டை, ஜூலை 20 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி - 4 பதவிகளுக்கான தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 47,679 பேர் எழுதுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரி விக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணி கள் தேர்வு தொகுதி - IV பதவிகளுக்கான தேர்வு 24.7.2022 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது. புதுக்கோட் டையில் 186 மையங்களில், மொத்தம் 47,679 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நாளன்று தேர்வு கண்காணிப்பு பணிக்காக துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையிலான அலுவ லர்கள் தலைமையில் 25 பறக்கும்படை குழுக்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல 59 நடமாடும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சி யர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் அமைக்கப் பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமனம் மற்றும் தேர்வு நடவ டிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் கைப்பேசி, கணிப்பான்கள் மற்றும் மின்னணு கடிகாரம் போன்ற சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும், தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்குள் தேர்வா ளர்கள் அனைவரும் தேர்வு கூடத்திற்கு வர வேண்டும் என்றார்.