புதுச்சேரி, அக். 6- புதுச்சேரில் சாலையோர வியாபாரி களை அப்புற ப்படுத்த மாட்டோம் என்று சிஐடியு தலைவர்களிடம் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். புதுச்சேரி நகரம், முத்தி யால்பேட்டை, முதலியார் பேட்டை, நெல்லி தோப்பு ஆகிய பகுதிகளில் ஆக்கிர மிப்புகளை அகற்றுவதாக கூறிய பொதுப்பணி, உள்ளாட்சித் துறை அதி காரிகள் சாலையோர வியா பாரிகளின் கடைகளை சேதப்படுத்தினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சிஐடியு சாலையோர வியா பாரிகள் சங்கத் தலை வர்கள் அதிகாரிகளை முற்று கையிட்டனர்.அப்போது, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படிதான் இந்த பணி நடை பெறுகிறது என்றனர். பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற தலைவர்கள் அங்கு போராட்டத்தை தொடர்ந்த னர். பின்னர் சிஐ டியு தலைவர்கள் பிரபு ராஜ், சீனூவாசன், கொளஞ்சி யப்பன், மதிவாணன், ரவிச் சந்திரன் ,அழகர்ராஜ், வடிவேல், சேவியர், சூரியன் ஆகியோரிடம் துணைஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரைத் தொட ர்ந்து, மாவட்ட ஆட்சி யர் வல்லவன் தொலைபேசி மூலம் சங்கத் தலைவர்களை தொடர்பு கொண்டார். அப்போது,“ நிரந்தரமாக கொட்டகை அமைத்துள்ள கடைகளை மட்டுமே அப்புறப்படுத்துகிறோம். அன்றாடம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளேன். அதையும் மீறி யாராவது பாதிப்பை ஏற்படுத்தினால் தன்னிடம் முறையிடுங்கள் என்று உறுதியளித்தார். அதனை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.