districts

img

ரேசன் கடைகளை திறக்கக்கோரி புதுச்சேரியில் சிறை நிரப்பும் போராட்டம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரி, நவ. 17- புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறக்கக்கோரி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சுதாசுந்தர ராமன், புதுச்சேரி மாநிலதலைவர் முனி யம்மாள், செயலாளர் இள வரசி ஆகியோர் கூட்டாக செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ரேசன் கடைகளைத் திறந்து அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்களை வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாகதான் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைக்கு, அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டது.   குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், மீண்டும் ரேசன் கடைகளைத் திறந்து அரிசி மற்றும் மலிவு விலை மளிகை பொருட்கள் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என்று அறிக்கை வெளி யிட்டுள்ளார். இது வெறும் வார்த்தை ஜாலம் போல் இல்லாமல் இவற்றை 2 மாதத்திற்குள், பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனே அரசு துவங்க வேண்டும். இது வெறும் வார்த்தை ஜாலங்களாக இருந்தால் புதுச்சேரியில் உள்ள பெண்களைத் திரட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
புகாரின் மீது விசாரணை
பள்ளிகளில் மாணவிகளுக்கும், பெண் ஆசிரியர்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது. நகரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து ஆசி ரியர்கள் மீது கல்வித்துறை நட வடிக்கை எடுத்துள்ளது. மாதர் சங்கம் தலையிட்ட பின்னரே இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாருக்கு உள்ளானவர்கள் தங்கள் அரசியல் பலத்தால் தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர். இச்சந்திப்பின் போது நிர்வாகிகள் சத்தியா, உமா, தாட்சாயணி ஆகி யோர் உடன் இருந்தனர்.