districts

நிலத்தடி நீரை நகரத்திற்கு எடுத்துச்செல்லும் திட்டத்தை கைவிடுக புதுச்சேரி அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஆக. 31- ஆழ்துளை போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை நகரத்திற்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் புதுச்சேரி பிரதேச குழு  நிர்வாகிகள் கூட்டம் பிரதேச பொருளா ளர் சதாசிவம் தலைமையில் மதகடிப் பட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பிர தேச செயலாளர் சங்கர், நிர்வாகிகள் அன்புமணி, நாகராஜ், முத்து, சரவணன், தேவராஜ் ஆகியோர் கலந்து  கொண்டனர். புதுச்சேரி நெற்களஞ்சியம் பாகூர்  மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்க ளில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்து வரும்  விவசாயிகளுக்கு இந்த  திட்டம் மிகப் பெரும் ஆபத்தை விளை விக்கும், ஏற்கனவே நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்து வரும் சூழ்நிலையில், புதுச்சேரி அரசு நகரத்தை ஸ்மார்ட் சிட்டி என மாற்றி இதற்கு 24 மணி நேர குடிநீர் ஆதாரத்திற்காக பாகூர் சோரியாங்குப்பம், குருவிநத்தம், மணமேடு, கரையாம்புத்தூர், பனை யடி குப்பம், நெட்டப்பாக்கம், கரிய மாணிக்கம் வரை உள்ள தென் பெண்ணை ஆற்றங்கரை ஓரம் மற்றும்  அதன் சுற்றியுள்ள நீர் பிடிப்பு ஏரிகளில்  இருந்து சுமார் 84 ஆழ்துளை போர் வெல்கள் அமைத்து. நீரை  நகரத்திற்கு  எடுத்து செல்லும் திட்டத்தை அமல் படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அரசு வலுக்கட்டாயமாக இந்த திட்டத்தை அமல்படுத்த இருப்பதை அகில இந்திய விவசாய சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு பதிலாக நகரப் பகுதி களில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆழப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் கடல் நீரை குடிநீராக் கும் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். அதேபோல் நகரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்  கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த கட்டாயப்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்வா தாரத்தை, விவசாயத்தை சீரழிக்கும் வகையில் கிராமப்புறங்களில் இருந்து  நகரத்திற்கு தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்க பால் கொள்முதல் விலையை உயர்த்த  வேண்டும். மேலும் 75 விழுக்காடு மானி யத்தில் தீவனம் வழங்க வேண்டும். புதுச்சேரி வழியாக அமைய உள்ள  விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையி லான புதிய தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடு தல் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.