பொள்ளாச்சி, ஜூலை 25- பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பொள் ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோமங்கலம் பகுதியில் வியாழனன்று போக்சோ விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் பொள் ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதேபோல, பொள்ளாச்சி அடுத்த அய்யம்பாளையம் தனியார் நூல் ஆலையில் பணி யாற்றும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர் வீரம்மாள், காவல் நிலைய துணை ஆய்வாளர் வள்ளி யம்மாள் மற்றும் தலைமை காவலர் சுமிதா உள்ளிட்டோர் பங்கேற்று பெண்களிடையே போக்சோ சட்டத்தினை குறித்து விளக்கி உரையாற்றினர்.
மேலும், தொடர்ந்து பொள்ளாச்சி மற் றும் ஆனைமலை, உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், பெற்றோர் கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். இது போன்ற போக்சோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பாலியல் குற் றங்கள் நடைபெறுவதை தடுக்க பெண்களிடையே இது ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் எனகாவல் ஆய்வாளர் வீரம் மாள் தெரிவித்தார்.