பெரம்பலூர், செப்.4 - ஆசிரிய பெருமக்களின் தேவை கள் என்ன என்பதை அறிந்து அதனை பூர்த்தி செய்யும் நிகழ்வாக “ஆசிரிய ருடன் அன்பில்” என்ற நிகழ்ச்சி தமிழ கம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை பெரம்ப லூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அரங்கில் பள்ளி தலைமை ஆசிரியர் கள் மற்றும் ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை யில், மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சி.ரா ஜேந்திரன் ஆகியோர் சிறப்பித்தனர். அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாண வர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருப்பதால், மாணவர்களின் தனித்திறனை வளர்க்க இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்க கூடாது என்பதன் அடிப்படையில், தமி ழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாட் டிற்கு மையப் பகுதியாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில் இதற்கென ஒரு தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள் ளது. இதில் தனி அலுவலரை நியமித்து “ஆசிரியர் மனசு” என்ற புகார் பெட்டி வைக்கப்பட்டு, அதன் மூலம் பெறப் படும் மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை இருந்த இடத்திலி ருந்தே எளிதில் தெரிவிக்கும் வகையில் “ஆசிரியர் மனசு” என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் தெரி விக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசாணை எண்.101 மற்றும் 108 குறித்த கோரிக்கைகளை செப்.10 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு முன்பாகவே முடித்துவிட வேண்டும் என்பதற்காக கோப்புகளை தயார் செய்து கொண்டிருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரி யர் நியமனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து, தமிழ்நாட் டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்ப லூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக் கிறது. “ஆசிரியப் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி” என்ற வரிகளுக்கு ஏற்ப, தங்களையே முழு மையாக அர்ப்பணித்து, மாணவ-மாணவிகளை சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு ஏற்றி விடும் ஏணிக ளாகவும், பல்வேறு இடர்களைக் கடந்து அவர்கள் கரைசேர உதவும் தோணி களாகவும் விளங்கும் ஆசிரியப் பெரு மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை யும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் 2021 - 22 ஆம் கல்வியாண் டில் 10, 12 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 49 பேருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாகவும், முதன்மை மாவட்ட மாக மாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனையும் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.