districts

img

‘வேலை கொடு, வாழ விடு’ மாதர் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்

பெரம்பலூர், அக்.17 - நூறு நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலையும் கூலியும் வழங்குவதோடு திட்டத்தினை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அனைத்து முதி யோர்களுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும். நீண்ட  காலமாக குடியிருக்கும் வீடு களுக்கு குடிமனை பட்டா வழங்க  வேண்டும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்  வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிறுத்தப் பட்டுள்ள திருமண உதவித்தொகை திட்டத்தினை மீண்டும் துவக்க வேண்டும். ஏழைகளின் குடும்ப  அட்டைகளில் உள்ள என்பி ஹச்ஹச் குறியீடுகளில் பிஹச்ஹச்  என்று திருத்தம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் “வேலை கொடு, வாழ விடு” என்ற முழக்கத்துடன் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  இதனொரு பகுதியாக டெல்டா  மாவட்டங்களின் பல்வேறு இடங் களில் போராட்டங்கள் நடைபெற்றன. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்.மகேஸ்வரி, செயலாளர் பி.சின்னப்பொண்ணு, பொருளாளர் ஐ.ஷர்மிளாபேகம், துணைத்தலைவர் பொன்மணி, துணை செயலாளர் எம்.சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், விதொச அ.கலையரசி, வாலிபர் சங்கம் கே.எம்.சக்திவேல், மாண வர் சங்கம் ராமகிருஷ்ணன் உள்பட  பலர் கலந்து கொண்டனர். மாவட் டம் முழுவதும் இருந்து 634 மனுக் கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக் கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.பிரியா நன்றி கூறினார்.
திருச்சிராப்பள்ளி
லால்குடி அரசு மருத்துவமனை யில் சிடி ஸ்கேன் மற்றும் ரத்த வங்கியை அமைக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். லால்குடி மேம்பாலத் திற்கு கீழே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி லால்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் மனு  கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது. போராட்டத்திற்கு மாதர் சங்க  தலைவர் சாரதா தலைமை வகித் தார். போராட்டத்தை விளக்கி மாநில துணைத் தலைவர் சங்கரி பேசினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, பொருளாளர் ஜெ.வைகைராணி, துணைத் தலைவர் டி.சலோமி, துணைச் செயலாளர் ஆர்.கவிதா  உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட் டத்தின் இறுதியாக கோரிக்கை கள் அடங்கிய சுமார் 200 மனுக் களை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு விடம் மாதர் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி தலைமை வகித்தார்.  மாதர் சங்க மாவட்ட செய லாளர் இ.வசந்தி, தஞ்சை ஒன்றியச்  செயலாளர் எஸ்.வனரோஜா, திரு வையாறு ஒன்றியச் செயலாளர் ஆர்.செல்வழகி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி. அம்சவள்ளி, மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் ஏ.ஜெயந்தி, மாவட்ட நிர்வாகி டி.வசந்தி, மாநகரத் தலைவர் புனிதா, முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.மாலதி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.