districts

img

பெண்களுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக விசாரிக்க வலியுறுத்தல்

பெரம்பலூர், மார்ச் 15- பெண்களுக்கு எதிரான குற் றங்களில் உடனடி விசாரணை நடத்தி அதற்குரிய தண்டணையை உறுதி செய்ய வேண்டுமென  பெரம்பலூர் மாவட்ட இளம் பெண்கள் மாநாடு தமிழக அரவை வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட இளம் பெண்கள் மாநாடு பெரம் பலூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெண்கள்-குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த  வேண்டும். குழந்தைத் திரு மணத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான  குற்றங்களில் உடனடியாக விசா ரணை நடத்தி அதற்குரிய தண்ட ணையை உறுதி செய்ய வேண்டும், பெண்கள் பணிபுரியும் இடங்க ளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  பெரம்பலூர் மாவட்ட மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள பிரச்ச னைகளுக்குத் தீர்வுகாண இடது சாரி அமைப்புகள், மாதர்சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து போராட முன் வர வேண்டும். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை தோற்கடிக்க வேண்டுமென மாநாட்டில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். மாநாட்டிற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயற்குழு எஸ்.பிரியா தலைமை வகித்தார். மாவட்  டத் தலைவர் எஸ்.கே.சரவணன் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மீனா, செந்தூர தேவி, ரோஜா, சுப்புலட்சுமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி சிறப்பரை ஆற்றினார்.  அ.கலையரசி (விதொச), பி. சின்னபொண்ணு (மாதர் சங்கம்), பி.ராமகிருஷ்ணன் (வாலிபர் சங்கம்), கே.எம்.சக்திவேல், (மாண வர் சங்கம்) ஆகியோர் வாழ்துரை வழங்கினர்.