மயிலாடுதுறை, ஏப்.4 - நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகேயுள்ள அமிர்தா நகர் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிர மணி-சித்ரா தம்பதியினரின் மூன்றாவது மகள் சுபாஷினி, சர் ஐசக் நியூட்டன் (தனியார்) கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்தார். முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடி யாக பணம் கட்ட வேண்டு மென வற்புறுத்தியுள்ளது. மேலும் பணம் கட்டவில்லை யென கட்டாய விடுப்பு அளித் ததுடன் கல்லூரிக்கு வந்த சுபாஷினியை வகுப்புக்கு வெளியே நிற்கவைத்து அவ மானப்படுத்தியுள்ளது. இதனால் மன உளைச்ச லுக்குள்ளான மாணவி சுபா ஷினி தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி நிர்வா கத்தின் அராஜகத்தால் உயிரி ழந்த மாணவியின் கொலைக்கு நீதிக்கேட்டு இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், மயிலாடு துறை மாவட்டம் பொறையார் த.பேமா.லு கல்லூரி மாண வர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கம் தலைமை யில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாணவர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மார்டின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலைவர் மணி பாரதி, ஒன்றிய செயலாளர் பிரவீன், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் ஐயப்பன், சங்க நிர்வாகிகள் விஷ்ணு ராஜ், ஜீவி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.