districts

img

நூறு நாள் வேலை வழங்க வேண்டும் கிராம சபை கூட்டத்தில் 3650 பேர் மனு

நாகப்பட்டினம், அக்.2 - நாடு முழுவதும் ஆண்டுக்கு 4 முறை  ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 என நான்கு நாட்களும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், நாடெங்கிலும் அக்டோ பர் 2 ஆம் தேதி (ஞாயிறு) காந்தி ஜெயந்தி  அன்று கிராம சபை கூட்டம் நடை பெற்றது.
கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம் முழு வதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை  கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு  ஊராட்சிகளில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கலந்து  கொண்டு பொதுமக்களின் கோரிக்கை களை கேட்டறிந்தார். முன்னதாக ஆவ ராணி ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் நாகை ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். புதுச்சேரி ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில், புதுச்சேரி ஊராட்சியில் உள்ள தாய் அங்காடியிலிருந்து விக்கினாபுரம் கிராமத்திற்கு பகுதி நேர அங்காடியாக பிரித்து தரக்கோரி கோரிக்கை வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி கோரிக்கையை நிறை வேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.
வேதாரண்யம்
வேதாரண்யம் ஒன்றியத்துக்குட் பட்ட பகுதிகளில் கிராம சபை கூட்டம்  நடைபெற்றது. இதில் கரியாப்பட்டினம், பிராந்தியங்கரை, வடமழை, மணக் காடு, தாணிக்கோட்டகம், தகட்டூர், தென் னடார், வண்டுவஞ்சேரி, அண்ணா பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில் நூறு நாள் வேலை வழங்க வேண்டும். குடிநீர், சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவற்றை செய்து  தர வேண்டுமென கோரிக்கை வைக்கப் பட்டது. பிராந்தியங்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிபிஎம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி கஸ்தூரி, ஒன்றிய கவுன் சிலர் அருள்மேரி தலைமை வகித்தனர்.
நூறு நாள் வேலை கோரி 3650 பேர் மனு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 ஊராட்சி களில் நூறு நாள் வேலை கேட்டு, 3,650 பேர் மனு அளித்தனர் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே. பக்கிரிசாமி தெரிவித்தார்.  அம்மாபேட்டை ஒன்றியம் புலவர் நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம  சபைக் கூட்டத்தில் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச்  செயலாளர் கே.பக்கிரிசாமி மனு அளித்தார். திருவோணம் ஒன்றியம் வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில், மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, செங்கிப் பட்டியில் மாவட்டப் பொருளாளர் கே. அபிமன்னன் மனு அளித்தனர்.  கும்பகோணம் ஒன்றியம் கொத்தங் குடியில் மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன் மனு அளித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி அம்மாபேட்டை ஒன்றி யம் ராராமுத்திரைக் கோட்டையில் நூறு  நாள் வேலை கேட்டு மனு அளித்தார்.  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பி, ஒரத்தநாடு ஒன்றியம் புதூர், மண்டலக்கோட்டை, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, ஆயங்குடி, ஆம்பலாப்பட்டு, நெய்வா சல் உள்ளிட்ட ஊராட்சிகளில் நூறு நாள்  வேலையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும். கிராமங்களில் மழைநீர் வடி கால் வாய்க்கால் அமைத்திட வேண் டும். அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றிட வேண்டும் என வலியுறுத்தி, வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கு. பாஸ்கர், ஒன்றியத் தலைவர் கோ. ஜெய்சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந் தராஜ், பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  வீ.துரைராஜ், அப்பாதுரை, மலர்கொடி  மற்றும் கிராம மக்கள் இணைந்து ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் மனு கொடுத்தனர். தஞ்சை ஒன்றியத்தில் 3 ஊராட்சி களில் 200 பேரும், பூதலூர் தெற்கு ஒன்றி யத்தில் 7 ஊராட்சிகளில் 320 பேரும், பூத லூர் வடக்கு ஒன்றியத்தில் 6 ஊராட்சி களில் 300 பேரும், பாபநாசம் ஒன்றியத்தில்  3 ஊராட்சிகளில் 90 பேரும், திருவை யாறு ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் 330  பேரும், கும்பகோணம் ஒன்றியத்தில் 7  ஊராட்சிகளில் 450 பேரும், திருப்ப னந்தாள் ஒன்றியத்தில் 1 ஊராட்சியில் 50  பேரும், திருவிடைமருதூர் ஒன்றியத் தில் 5 ஊராட்சிகளில் 260 பேரும், அம்மாபேட்டை ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் 600 பேரும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் 640  பேரும், பட்டுக்கோட்டை ஒன்றியத் தில் 3 ஊராட்சிகளில் 200 பேரும், திரு வோணம் ஒன்றியத்தில் 3 ஊராட்சி களில் 100 பேரும், பேராவூரணி ஒன்றி யத்தில் 2 ஊராட்சிகளில் 50 பேரும், சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் 2 ஊராட்சி யில் 60 பேரும் என நூறு நாள் வேலை  கேட்டு கிராம சபைக் கூட்டத்தில் மனு  கொடுத்துள்ளனர்.
ரேசன் கடை அமைக்க வேண்டும்
அய்யம்பேட்டை அருகே உள்ளிக் கடையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலை வர் கணேசன் தலைமை வகித்தார். இதில் ஆடுதுறை மெயின் சாலையில் குவிந்துள்ள குப்பைகளை நெடுஞ் சாலைத் துறை அகற்ற வேண்டும். ஆடு துறையில் பகுதி நேர அல்லது முழு  நேர ரேசன் கடை அமைக்க வேண்டும்  உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் பங்கேற்ற மக்கள் நூறு  நாள் வேலையை தொடர்ந்து வழங்க  வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  ராஜகிரியில் நடந்த கூட்டத்திற்கு தலை வர் சமீமா பர்வீன் முபாரக் தலைமை வகித்தார்.
கொன்றைக்காட்டில் சாலை வசதியை மேம்படுத்துக!
பேராவூரணி அருகே உள்ள காலகம்  ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் கிராம  பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியப் பொறுப்பாளர் வே.ரெங்கசாமி ஆகியோர், ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் மற்றும்  கிராம சபைக் கூட்டம் நடத்தும் அலுவ லரிடம் அளித்த மனுவில் கூறியுள்ள தாவது: கொன்றைக்காடு ஆற்றுப்பாலத் தில் இருந்து திருப்பூரணிக்காடு செல் லும் பாலத்தில் தார்ச்சாலை பழுதடைந் துள்ளது. கொன்றைக்காடு கடைவீதி யில் இருந்து கிராம குடியிருப்பு வழி யாக செல்லும் தார்ச்சாலை, கொன்றைக் காட்டிலிருந்து ஆனைக்காடு செல்லும்  சாலையில் இருந்து முத்தரையர் சுடு காடு வரை செல்லும் சாலையை முழு மையாக செப்பனிட்டு தார்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும். சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். கொன்றைக்காடு வடக்குப் பகுதி கொல்லர் தச்சர், மருத்துவர், சல வைத் தொழிலாளர்களின் சுடுகாடு -  இடுகாட்டை சர்வே செய்து ஆக்கிர மிப்பை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து  தர வேண்டும்.  கொன்றைக்காடு வடக்கு பகுதி, பட்டுக்கோட்டை சாலையில் இருந்து ஆசாரி தெரு செல்லும் சாலையை சர்வே செய்து, சாலையை செப்ப னிட்டு தடுப்பு சுவர் அமைத்து தர  வேண்டும். கொன்றைக்காடு உயர் நிலைப்பள்ளி பின்பகுதி சாலை, ரயில்வே பாலம் முதல் முத்தரையர் சாலைகளை செப்பனிட்டு தர வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.