நாகப்பட்டினம், மே 24- பணிபுரியும் போது நிர்வாகத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரி ழந்த மின் ஊழியருக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி மின் வட்டத்தில் பிரதா பராமபுரத்தைச் சேர்ந்த ஜி.சபரி கிருஷ்ணன் கேங்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 7.7.2021 அன்று பரவை பகுதியில் பணிபுரியும் போது நிர்வாகத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு நியாயம் கேட்டு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் அப்போது போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த பேச்சு வார்த்தையின்போது, குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும். இழப்பீடு தொகை வழங்குவதாகவும் நிர்வாகத்தின் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை யிலும் மின்சார வாரியம் எத்தகைய நிவா ரண நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை. மேலும் அந்த விபத்து நடந்தபோது அங்கு இளநிலை பொறியாளராக ஏ.ராய்ஸ்டன் என்பவர் பணியாற்றி வந்தார். அவருக்கு பணி மாறுதல் உத்த ரவு வழங்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அதே வேளாங்கண்ணி பிரிவிற்கு மீண்டும் மாற்றலாகி, இளநிலை பொறி யாளராக வேலை பார்த்து வருகிறார். அந்த இளநிலை பொறியாளரின் மாறுதல் உத்தரவை ரத்து செய்திட கோரியும், ஏற்கனவே பேசப்பட்டது போல் இறந்த வரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும், இழப்பீட்டுத் தொகை யும் உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகப்பட்டினம் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் எஸ்.சிவராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, நாகை திட்ட செயலாளர் எம்.கலைச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் எம்.குருசாமி, மீன்பிடி சங்க மாவட்ட தலைவர் எஸ்.மணி, உள்ளாட் சித் துறை மாவட்டச் செயலாளர் கே.அன்ப ழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.