districts

img

தனியார் கல்லூரியின் அராஜக செயலால் பிசியோதெரபிஸ்ட் மாணவி தற்கொலை கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி மாணவர் சங்கம் போராட்டம்

நாகப்பட்டினம், மார்ச் 31- நாகூர் சுனாமி குடியி ருப்பைச் சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட் மாணவி கல்விக் கட்டணம் செலுத்தாததால், கல்லூரி நிர்வாகம் அளித்த தொந்தரவு தாங்காமல் அம்மாணவி தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.  நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சுனாமி குடியிருப்பு, வண்ணான்குளம், மேல்க ரையைச் சேர்ந்தவர் சுப்பிர மணியன் மகள் சுபாஷினி (19). இவர் நாகப்பட்டினம் பாப்பாகோவில் ஊராட்சி யில் உள்ள சர் ஐசக் நியூட்டன்  கல்லூரியில் பிசியோதெர பிஸ்ட் படித்து வந்தார். கடந்த  வாரம் கல்விக் கட்டணம் செலுத்தாததால், கல்லூரி நிர்வாகம் கட்டாய விடுப்பு மற்றும் வகுப்பு வாசலில் நிற்க வைத்தல் உள்ளிட்ட பல  தொந்தரவுகளுக்கு மாண வியை ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்  மனமுடைந்த மாணவி சுபா ஷினி வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.  மாணவியின் உடல் நாகப்பட் டினம் அரசு தலைமை மருத்து வமனைக்கு உடற்கூராய்வுக் காக அனுப்பி வைக்கப்பட்டது.  இதனிடையே கல்லூரி நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகளைக் கண்டித் தும், இறந்துபோன மாண விக்கு நியாயம் கேட்டும் இந்திய மாணவர் சங்கத்தி னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிக்கு நீதி  கேட்டும் தற்கொலைக்கு கார ணமாக இருந்த ஆசிரியர் களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் சாலை மறி யல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாண வர் சங்கத்தின் கல்லூரி மாணவர் அஜித்குமார் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி இந்திய மாணவர் சங்க மாநில செயற் குழு உறுப்பினர் அமுல் கஸ்ட்ரோ பேசினார். வாலி பர் சங்க மாவட்ட பொருளா ளர் நன்மாறன், கல்லூரி மாணவர்கள் பலர் கண்டன  உரையாற்றினர். தற்கொ லைக்கு காரணமாக இருந்த  ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த பிறகு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். கல்லூரி நிர்வாகத்தி னரை கைது செய்ய வலியு றுத்தி நாகப்பட்டினம் அரசு  தலைமை மருத்துவமனை யில் மாணவியின் உடலை  வாங்க மறுத்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.