நாகப்பட்டினம், மார்ச் 14- கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கும் நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி எம்எல்ஏ பேருந்து பய ணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் பயன்பாட் டிற்காக நாகூர் துவங்கி மூங்கில்குடி, கடம் பன்குடி, ஓர்குடி வழித்தடத்தில் கீழ்வேளூர் வரை பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரி களின் கவனத்திற்கு வீ.பி.நாகைமாலி கொண்டு சென்றார். அதன்படி புதிய பேருந்து இயக்குவதற்கான ஒப்புதல் பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப் பட்டது. இந்நிகழ்வில் மீன் வளர்ச்சிக் கழகத் தலை வரும், திமுக மாவட்ட செயலாளருமான என். கௌதமன், கீழ்வேளூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ப.கோவிந்தராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் எல்.பழனியப்பன், கீழ்வேளூர் பேரூராட்சி தலைவர் எஸ்.இந்திராகாந்தி சேகர், ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.