districts

img

உப்பாத்து ஓடை உயர்மட்ட பாலம்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தூத்துக்குடி, செப்.12- தூத்துக்குடி உப்பாத்து ஒடையின் குறுக்கே ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கொ.வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்ட காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் (உப்பாத்து ஒடை) குறுக்கே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ. 14.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. . உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு பணிகளில் கூடுதல் ஆட்சிபர் (வளர்ச்சி) ரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, உதவி செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநிலக் கோட்டம்) ஆதிமூலம் ஆகியோர் உடன் சென்றனர்.