விருதுநகர், செப்.6- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் நடை பெற்ற திருமண விழாக் களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலக கட்டிட நிதி ரூ.23 ஆயிரமும், தீக்கதிர் ஆண்டுச் சந்தாக்களையும் வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இராஜ பாளையம் நகர கட்சி உறுப்பி னராக இருப்பவர் தோழர் கருப்பசாமி. இவரது சகோ தரர் பழனிக்குமார் - ராஜ லட்சுமி ஆகியோரது திரு மண விழா நடைபெற்றது. அதில், மணமக்கள் ரூ.10 ஆயிரத்தை சிபிஎம் மாநி லக்குழு அலுவலகமான தோழர் பி.ஆர். நினைவக கட்டிட நிதியாக வழங்கினார். மேலும், மற்றொரு கட்சி உறுப்பினரான தோழர் பாண்டியராஜனின் புதல் வன் ராஜா சுந்தர் - வளர்மதி ஆகியோரது திருமண விழா விலும் மணமக்கள் ரூ 10 ஆயி ரம் நினைவக கட்டிட நிதி வழங்கினர். இதேபோல், கட்சி உறுப் பினரான தோழர் பெ.சரவ ணன் - காந்திமதி தம்பதிய ரின் 25வது ஆண்டு திரு மண நாளை முன்னிட்டு ரூ.3 ஆயிரம் மாநிலக்குழு அலுவ லக கட்டிட நிதியும் வழங்கி னர். மேலும் இந்த மூன்று குடும்பத்தாரும் தீக்கதிர் ஆண்டுச் சந்தாவுக்கான தொகையையும் வழங்கி னர். இந்த நிதியினை செப்டம் பர் 5 அன்று விருதுநகரில் நடைபெற்ற கட்சியின் மாவட் டக்குழு கூட்டத்தில் கட்சியின் ராஜபாளையம் நகரச் செய லாளர் பி. மாரியப்பன் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமதுவிடம் வழங்கி னார். மேலும், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரூ 30ஆயி ரத்தை பி.ஆர் நினைவக நிதி வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன். மாநிலக் குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி உட்பட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர்.