districts

img

திருவில்லிபுத்தூரில் தனியார்  ஆக்கிரமித்த நீர்நிலைப்பகுதி மீட்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 7-  திருவில்லிபுத்தூர் வட்டம் அத்திகுளம் செங்குளம் ராஜகுல ராமபேரி கண்மாய்க்கு செல்லும் கால்வாய் பகுதியை என்ஜிஓ காலனியில் சுமார் 6 சென்ட் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கார் செட் அமைத்து பழைய பொருட்கள் வைக்கும் அறை அமைத்து ஆக்கிர மிப்பு செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படை யில் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை உதவி  செயற்பொறியாளர் பொன்ராஜ், உதவி பொறியாளர் சிவராம்குமார் மற்றும் நகர் காவல் ஆய்வாளர் கீதா மற்றும் வருவாய் துறையினர் பொதுப்பணித் துறையினர் புல்டோசர் மூலம் தனியார் ஆக்கிரமித்திருந்த கார்செட்டை அகற்றி, நிலத்தினை மீட்டனர்.