மதுரை, டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் பொதுநல வழக்கு தாக் கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் பொங் கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக் கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 2.20 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப் பட உள்ளது. இதற்கான வேஷ்டி, சேலைகளை தமி ழக நெசவாளர்களிடம் மட் டுமே வாங்க வேண்டும் என்ற பாராட்ட தகுந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல் லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட இருபது வகையான விவ சாயப் பொருட்கள் அரு காமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட் டுள்ளது. சில சமயங்களில், அருகாமை மாநிலங்களிலி ருந்து செய்யப்படும் கொள் முதலில் தரமான பொருட்கள் வழங்குவது கிடையாது. எனவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க உள்ள பொருட்களை தமிழக விவ சாயிகளிடமிருந்து வாங்கி னால் விவசாயிகள் பலன டைவர். இது தொடர்பாக நட வடிக்கை கோரி மனு அளித் தும் நடவடிக்கை இல்லை. பொங்கல் பரிசுத் தொகுப் பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவ சாயிகளிடமிருந்து கொள் முதல் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியி ருந்தார். இந்த மனு திங்களன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந் தது. அப்போது அரசுத் தரப் பில், “கொள்முதல்” அரசின் கொள்கை ரீதியான முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி கள், வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத் தரவிட்டு வழக்கை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத் தனர்.