districts

img

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தில் ஆட்சியர் மரியாதை

மதுரை, பிப்.14-  மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் தியாகி கள் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிப்ரவரி 14 செவ்வாய்க்  கிழமையன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.  மதுரை மாவட்டம் உசி லம்பட்டி அருகே பெருங்கா மநல்லூரில் 3.4.1920-அன்று ஆங்கிலேயர்களின் எதேச்  சதிகார சட்டத்தை எதிர்த்து  போராடியவர்கள் ஆங்கிலே யர்களால் சுட்டுக் கொல்லப்  பட்டனர். இதில் உயிர்நீத்த 16 தியாகிகளை கௌர விக்கும் வகையில் தமிழ்நாடு  அரசு செய்தி மக்கள் தொட ர்பு துறையின் மூலம் ரூ.147 லட்சம் மதிப்பீட்டில் ‘பெருங் காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம்’ கட்டி  முடிக்கப்பட்டு, மண்டபத் தில் நினைவு தூண் நிறு வப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 14 அன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொ லிக் காட்சி மூலம் பெருங்கா மநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், பெருங்காமநல்லூர் தியாகி கள் நினைவு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவு தூணில் மலர் தூவி மரி யாதை செலுத்தினார். மேலும், நினைவு மண்டப வளாகத்தில் மரக்கன்று களை நடவு செய்தார். இந்நிகழ்ச்சியின் போது,  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்  பி.அய்யப்பன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியா ளர் எஸ்.மாதவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயசந்திரன்,  பெருங்காமநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி பவுன்பாண்டி மற்றும் பெருங்காமநல்லூர் தியாகிகள் நலச்சங்க நிர் வாகிகள்  பலர் கலந்து கொண் டனர்.