districts

img

சிவகங்கையில் விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார்

சிவகங்கை செப்.10-  சிவகங்கை மாவட்டத் தில் சுதந்திர போராட்ட வீரர் “வாளுக்கு வேலி அம்பலம்”  அவர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்கும் பணி மற்றும் சுதந்திர  போராட்ட காலத்தில் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்தது நினை வாக சிராவயல் ஊராட்சிக் குட்பட்ட பகுதியில், அமைக் கப்பட்டு வரும் மணிமண்ட பம்  கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை தமிழக இளை ஞர் நலன் -விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச் சர் தி.உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் 10 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற் கொண்டார். இதற்கு தமிழக கூட்டுற வுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமை வகித்தனர்.  ஆய்வு மேற்கொண்டு பின்னர் அமைச்சர் உதய நிதி தெரிவிக்கையில், மொழி, இனம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கி யத்துவம் அளித்து, அதற் கென பாடுபட்டவர்களை கௌ ரவிக்கின்ற வகையிலும், அவர்களின் புகழை போற்று கின்ற வகையிலும், அவர்க ளுக்கு நினைவகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் திருவுருவச்சிலை கள் ஆகியவைகளை அமை த்து, எதிர்கால சந்ததியி னர்கள் அறிந்து கொள்கின்ற வகையில், தமிழகம் முழு வதும் அதற்கான நடவ டிக்கைகளை முதலமைச்சர் சிறப்பாக மேற்கொண்டு ள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் ”வாளுக்கு வேலி அம்ப லம்” புகழிற்கு வலுச்சேர்க் கின்ற வகையில், அன்னா ரது பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடிடவும் உத்தரவிட்டு, கடந்த 10.06. 2023 அன்று முதல் அரசு விழா வாக கொண்டாடப்பட்டு வரு கிறது. சுதந்திர போராட்ட காலத் தில் தோழர் ஜீவா அவர்க ளை பற்றி அறிந்த அண்ணல் காந்தியடிகள், ஜீவா ஆசிரி யராக பணிபுரிந்த சிராவயல் ஊராட்சியில் நேரில் சந்தித் தார் என்பது வரலாறு. அவ்வரலாற்று நிகழ்வினை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகை யிலும், அவர்களது புகழை போற்றுகின்ற வகையிலும், அச்சந்திப்பு நிகழ்வின் அடையாளமாய் சிராவயல் பகுதியில் ரூ.300 இலட்சம் மதிப்பீட்டில் மணிமண்டப கட்டுமானப்பணிகள் சிறப் பாக நடைபெற்று வரு கிறது. அவ்வாறாக, நடை பெற்று வரும் பணிகள் குறித்து மேற்கண்ட பகுதிக ளில் களஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டது. மேலும், கட்டுமானப் பணிகளை தர மான முறையில் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்று  தெரி வித்தார். இந்த ஆய்வுகளின் போது,  மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர்  ஆ.தமிழ ரசி ரவிக்குமார்,  தேவ கோட்டை சார் ஆட்சியர். ஆயுஷ் வெங்கட் வட்ஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ராஜசெல்வன் மற்றும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.