districts

img

நத்தம் அருகே சொறிப்பாறைபட்டியில் ஜல்லிக்கட்டு

நத்தம், மே 18- திண்டுக்கல் மாவட்டம்,  நத்தம் அருகே சொறிப் பாறைப்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன், பால முருகன் கோவில் திருவிழா வை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  வருவாய் கோட்டாட்சி யர் பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர்.  திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி,  புதுக்கோட்டை, சிவகங்கை  உள்ளிட்ட பல மாவட்டங்க ளைச் சேர்ந்த சுமார் 457  காளைகள் அவிழ்த்துவிடப் பட்டன.  5 சுற்றுகளாக நடந்த  போட்டியில் 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட னர்.  பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கிப் பிடித்த வீரர்களுக்கும், வெள்ளி காசுகள், கட்டில்,  பீரோ, குக்கர், ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப் பட்டன. இதில் காளைகள் முட்டியதில் நத்தம்- உலுப்  பகுடியை சேர்ந்த சங்கர பாண்டியன்(21) மதுரை -உசி லம்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி(24) மதுரை யை சேர்ந்த நாகராஜ்(22), அலங்காநல்லூரை சேர்ந்த  சரவணன்  (28.) கொட்டாம் பட்டியை சேர்ந்த கணபதி (22) உள்பட 27 பேர் காய மடைந்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாஸ்கரன் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த போட்டியை காண சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலி ருந்தும் ஏராளமானோர் வந்தி ருந்தனர்.  முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண் ணன் உள்ளிட்ட பல்வேறு  முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.