districts

img

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்

தேனி, செப்.7- வைகை அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதான கால்வாய் ஒரு போக பாசன பரப்  பிற்கு விநாடிக்கு 1,130 கன அடி  வீதம் தண்ணீரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பு, திரு மங்கலம் பிரதான கால்வாய் கீழ்  உள்ள ஒரு போக பாசனப் பரப்பு களுக்கு 120 நாட்கள் வரை தண்ணீர்  திறக்க அரசாணை பிறப்பிக்கப் பட்டது. இதன்படி, அணையிலிருந்து விநாடிக்கு 1,130 கன அடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த  நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன், தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சிவ கங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூ தனரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அணையிலிருந்து புதன் கிழமை முதல் 45 நாட்களுக்கு முழு மையாகவும், அதைத் தொடர்ந்து 75 நாட்களுக்கு முறை பாசன  அடிப்படையிலும், 120 நாட்களுக்கு  மொத்தம் 8,461 மில்லியன் கன  அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.  

இதன்மூலம் மதுரை, திண்டுக்கல்,  சிவகங்கை ஆகிய மாவட்டங்க ளில் பெரியாறு பாசனப் பகுதியில்  உள்ள 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒரு போக நிலங்கள், திருமங்கலம் பிர தானக் கால்வாய் கீழ் உள்ள 19  ஆயிரத்து 439 ஏக்கர் ஒரு போக நிலங்கள் என மொத்தம் ஒரு லட்  சத்து 5,002 ஏக்கர் ஒரு போக நிலங்  கள் பாசன வசதி பெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் இரா.தண்டபாணி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட  செயற்பொறியாளர் ந.அன்புச்  செல்வம், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் தங்கவேல் (பெரியகுளம்), எம்.சக்கரவர்த்தி  (தேனி), பெரியகுளம் நகராட்சி தலைவர் சி.சுமிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணி யன், மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, பெரியகுளம் வரு வாய் கோட்டாட்சியர் சிந்து, பெரி யாறு வைகை வடிநில கோட்ட  செயற்பொறியாளர் ந.அன்புச் செல்வம், ஊராட்சி ஒன்றியக் குழுத்  தலைவர்கள் தங்கவேல் (பெரிய குளம்), எம்.சக்கரவர்த்தி (தேனி), பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற தலைவர் சி.சுமிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அணைகளில் நீர்மட்டம் 

வைகை அணைக்கு 2816 கன அடி நீர் வருகிறது. இதனால் மதுரை  உள்பட 3 மாவட்ட கரையோர மக்க ளுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது.  2242 கனஅடிநீர் வருகிறது. 1867 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55  அடி, அணைக்கு வரும் 659 கன அடி நீர் உபரியாக திறக்கப்படு கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 176 கனஅடி நீர் வருகிறது. 3 கன  அடி நீர் குடிநீருக்காகவும், மற்றவை  உபரியாகவும் திறக்கப்படுகிறது. பெரியாறு 12.2, தேக்கடி 7.6, சோத் துப்பாறை 6, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.