ஆண்டிபட்டி வட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி பெண் அலைக்கழிப்பு
தேனி, ஜூலை 12- ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் அலைக்கழிக்கப் பட்டதாக தேனி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . சிவகங்கை மாவட்டம் ,ஸ்ரீ கங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கே.சரண்யா .இவர் கடந்த 12.4.2022 ஆம் ஆண்டு தனது குடும்ப நிலத்தின் ஆவணத்தில் தவறாக கூட்டுப் பட்டா தாக்கலாகி இருப்பதால் ரத்து செய்ய கோரி மனு அளித்துள்ளார். 15 மாதங்கள் கடந்த பின்னரும் பட்டா வழங்க வில்லை. மூன்று முறை விசாரணை நடத்தியும் ,இறுதி விசாரணை நடத்தியும் பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் ,நேரில் கேட்டல் அலட்சியமாக பேசி அலைக்கழிப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் சிந்து, ஆண்டிபட்டி வட்டாட்சி யர் அலுவலகத்தில் உடனடியாக பணியை மேற்கொள்ள ஆணையிட்டார் .இல்லாவிடில் அடுத்த வாரம் ஆட்சியர் அலுவலகம் வரும்படி சரண்யாவை கேட்டுக்கொண்டார்.