தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). உடல் நல்ககுறைவால் சென்னையில் செவ்வாயன்று காலமானார். அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.