திருவில்லிபுத்தூர், செப்.11- விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளங்கலை வேளாண் துறை மாண வர்கள் வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராம தங்கல் திட்டத்தில் திருவில்லிபுத்தூர் பகுதியில் தங்கி விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகளையும் செயல்முறை விளக்கமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். மடவர்விளாகத்தில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார தொழில் நுட்பக்குழு மற்றும் வட்டார விவசாய ஆலோசனைக்குழு கூட்டம் நடை பெற்றது, அதில் இம்மாணவர்கள் கலந்து கொண்டு இணையதளத்தில் வேளாண் பொருட்களை சந்தைப் படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்பொழுது இடைத்தரகர்களின் பங்களிப்பின்றி எவ்வாறு இணையத்தளத்தில் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.