districts

மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகள் பெயர் மாற்ற இன்று சிறப்பு முகாம்

கும்பகோணம்,  ஜன.9 - மின் இணைப்பு கேட்டு  விண்ணப்பித்த விவசாயி கள் பெயர் மாற்றம் செய்ய  சிறப்பு முகாம் ஜனவரி 10  ஆம் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது என்று கும்பகோ ணம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மகா லிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த ஒரு லட்சம் விவசாய மின்  இணைப்பு வழங்கும் திட்டத் தின் கீழ், மார்ச் 2013 வரை  பதிவு செய்த சாதாரண வரிசை விண்ணப்பதாரர்கள், ஏப்ரல் 2013 முதல் மார்ச்  2014 வரை பதிவு செய்தவர் களுக்கு ரூ.10 ஆயிரம் சுய நிதி திட்டத்தின் கீழ் அடிப்ப டையிலும், ஏப்ரல் 2014 முதல்  மார்ச் 2018 வரை ரூ.500 பதிவு  கட்டணம் செலுத்திய சுயநிதி  திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் செலுத்து வதற்கு சம்மத கடிதம் வழங்கி  உள்ள விண்ணப்பதாரர்க ளுக்கு தயார் நிலை பதிவு  செய்யும் கடிதம் அனுப்பப்பட் டுள்ளது.

மேலும் தட்கல் விரைவு  திட்டத்தின் மூலம் விவசாய  மின் இணைப்பு பெற விருப் பம் உள்ள அனைவரும், உட னடியாக விண்ணப்பம் அளித்து மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். மேலும் சிறப்பு திட்ட மாக பதிவு செய்த விவசாயி கள் பயன்பெறும் வகை யில், பெயர் மாற்றம், புல  எண் மாற்றம் மற்றும் கிணறு,  ஆழ்குழாய் கிணறு மாற்றம் இருப்பின் அது தொடர்பான ஆவணங்களை உடனடி யாக அளித்து உரிய மாற்றம்  செய்திட சிறப்பு முகாம் கும்ப கோணம் கோட்ட செயற்பொ றியாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜன. 10) காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெறுகிறது. கும்பகோணம் கோட்டத் திற்கு உட்பட்ட புறநகர் பாப நாசம் நகர், பாபநாசம் நகர்,  அய்யம்பேட்டை புறநகர், அய்யம்பேட்டை, திருக்க ருகாவூர், கணபதி அக்ரஹா ரம், கபிஸ்தலம், சுவாமி மலை, திருபுரம்பியம், பட்டீஸ்வரம் ஆகிய பிரிவு களுக்கு உட்பட்ட விருப்பம் உள்ள அனைத்து விவசாயி களும் இதில் பங்கேற்று பயன் பெறலாம் என கூறப்பட்டு உள்ளது.