கிருஷ்ணகிரி, பிப்.6- ஓசூர் மாநகராட்சி 37 ஆவது வார்டில் உள்ள மிடுகரப்பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த 250 க்கும் மேற்பட்டோர் தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் சுடுகாடு, பாதை, சுற்றுச்சுவர் வசதி கேட்டு 40 ஆண்டு களுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கட்சியும் வாலிபர் சங்கமும் தொடர்ச்சியாக போராடிய தன் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன்பு 89 செண்ட் நிலம் சுடுகாட்டிற்காக அரசு ஒதுக்கியது. அதற்கு செல்லும் சாலை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதால் இது வரைக்கும் சாலை வசதி அமைத்து தரவில்லை. ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை யிலிருந்து மிடுகரப்பள்ளி செல்லும் பிரதான சாலையும் தனியாரால் ஆக்கிர மிக்கப்பட் டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பல முறை சுட்டிக்காட்டியும் பலனில்லை. வழக்கை காரணம் காட்டி ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, மத்திகிரி சர்வே எண்: 720 இல் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தையும் வருவாய்த்துறை அதி காரிகள் சிலரால் வேறு நபர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். மிடுகரப்பள்ளி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டுப் பாதையை தனிநபர் ஆக்கிரமித்திருப்பதை அகற்றி சாலை அமைத்து தர வேண்டும், மிடு கரப்பள்ளி பிரதான சாலையில் தனியாரின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், பஞ்சமி நிலத்தை தனியாருக்கு பட்டா செய்துள்ளதை ரத்து செய்து மீட்டிட வேண்டும். தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் வருவாய் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் 215 கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சாராட்சி யர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அனுமதி கோரப்பட்டது. அதற்கும் மறுக்கப்பட்டது. இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில்ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் விளக்கி பேசினார். மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் சிபி. ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ராஜாரெட்டி, செயற்குழு உறுப்பினர் சுரேஷ், சிஐடியு மாவட்டத் தலைவர் வாசுதேவன், ஆட்டோ சங்கத் தலைவர் குருநாதன், வாலிபர் சங்கம் மாவட்டச் செயலாளர் இள வரசன், பன்னியாண்டிகள் சங்க மாவட்டத் தலைவர் சீனிவாசன்,செயலாளர் தாமோதரன், துணைச்செயலாளர் வெங்க டேஷ்,விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், ஒன்றிய தலைவர் திம்மா ரெட்டி,ரவி புனிதா,பாரதி ஆகியோர் பேசினர். பின்னர், வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்றபோது அங்க யாரும் இல்லாததால் வட்டாட்சியர் அலு வலக வாயிலில் அமர்ந்து காத்திருப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் இதற்காக சமரச பேச்சு வார்த்தைக்கு வட்டாட்சியர் நேரம் ஒதுக்கி உள்ளதாகவும் அறிவித்தனர். இதனை யடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.