கரூர், ஏப்.13 - பழிவாங்கும் நோக்கத்துடன் ஏழு ஆசிரியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த கரூர் மாவட்ட கல்வி அதிகாரி சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செய லாளர் சி.முருகேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத் தில் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய் வில் அதிகாரிகள் செய்த குளறுபடி களால் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடவூர் ஒன்றிய ஆசிரியர் மோகன் 1.4.2022 அன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். முறையற்ற இந்த தற்காலிக பணி நீக்கத்தை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் 11.4.2022 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றிரவு போராட்டம் தொடர்ந்த சூழ்நி லையில், ஆசிரியர் மோகன் மீது எடுக்கப் பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் காத்தி ருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் எவ்வித முகாந்திர மும் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செய லாளர் ஜ.ஜெயராஜ், மாநில உதவி செய லாளர் சகிலா உள்ளிட்ட ஏழு மாவட்ட நிர்வாகிகளை தற்காலிக பணி நீக்கம் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழி வாங்கும் நோக்கத்துடன் உத்தர விட்டுள்ளனர். கரூர் மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமாரின் தூண்டுதலின் அடிப்ப டையிலேயே இந்த தற்காலிக பணி நீக்க நடவடிக்கை நடைபெற்றிருப்பதாக தெரியவருகிறது. அநீதிக்கு எதிராக நியாயம் கேட்டு போராடிய சங்க தலை வர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கும் நடவடிக்கையை சிஐடியு கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் தொ டர்ந்து ஆசிரியர் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, ஆசிரி யர்கள் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்திட வேண்டும். தொடர்ந்து ஆசிரியர் சமுதாயத்தின் மீது விரோதப் போக்கை கடைபிடிக்கும் கரூர் மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார் மீது தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும் துறைரீதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என சிஐடியு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக் கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.