கரூர், பிப். 9 - கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கரூர் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் கரூர் மாநக ராட்சி வேட்பாளர்கள் 48 பேரையும் ஆதரித்து வாக்கு சேகரித் தார். அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார். இதனை யடுத்து வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே பள்ளபட்டி, புகளூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கிருஷ் ணராயபுரம், புலியூர், உப்பிடமங்கலம், பழைய ஜெயங் கொண்டம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், குளித்தலை பேருந்து நிலையம் அருகே குளித்தலை நக ராட்சி, மருதூர், நங்கவரம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டார்.