கரூர், ஏப்.11 - கரூர் முதன்மை கல்வி அலுவ லர் ஊழியர் விரோதப் போக்குடன் செயல்படுவதை கண்டித்தும், ஊழியர்களை அச்சுறுத்தும் வகை யில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைக் கண்டித் தும், கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் கலந் தாய்வு நிகழ்வில் குறைகள் சரி செய்யப்பட்டபோதும், அப்பாவி அலு வலக பணியாளர்களை கண்டிக்கும் நோக்கத்தோடு தற்காலிக பணி நீக்கம் செய்து இருப்பதை கண்டித் ்தும், இதற்கு முழு காரணமான குளித்தலை மாவட்ட கல்வி அலுவ லர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இன்று வரை அவர் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். தற்காலிக பணி நீக்க நடவடிக்கை யில் பாரபட்சமான முறையில் கரூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்ப டுகிறார். மேலும் கல்வித்துறை அலுவ லகங்களில் போதுமான கூடுதல் பணி யிடங்கள் ஏதும் அனுமதிக்கப்படாத நிலையில், குறிப்பாக வட்டார கல்வி அலுவலகங்களில் கடுமையான பணிச் சுமைக்கு மத்தியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மீது, சாதாரண விஷயங்களுக்குகூட 17அ மற்றும் 17ஆ என குற்றச்சாட்டு குறிப்பாணை கள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இன்று வரை எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கரூர் முதன்மை கல்வி அலுவலர் ஊழியர் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தற்காலிக பணிநீக்கம் செய்த பணியாளர்களை உடனடி யாக மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் முதன்மை கல்வி அலு வலர் அலுவலகம் முன்பு பெருந்தி ரள் முறையீடு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டி.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ் நாடு கல்வித்துறை நிர்வாக அலுவ லர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொன்.ஜெயராம் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுப்ரமணியன், மாவட்ட செயலா ளர் கே.சக்திவேல், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜா.ஜெயராஜ், மாவட்ட செயலாளர் கோபி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட துணைத் தலை வர்கள் லட்சுமணன், சிவா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.