கரூர், மார்ச் 30- கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வலி யுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத் தின் கரூர் மாவட்டக்குழு (சிஐடியு) சார்பில் மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.துரைச்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், கட்டுமான சங்க மாவட்டச் செய லாளர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டத் தலைவர் ப.சரவணன், சிபிஎம் கரூர் ஒன்றியச் செயலாளர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரப்பட்டி, அண்ணாநகர், சிவியாம்பாளையம் பகுதியில் வசிக்கக்கூடிய வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி கடந்த 12.12.2022 முதல் தொடர்ச்சி யாக மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காப்படாததை கண்டித்தும், உடன டியாக இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தை தொடர்ந்து மண்மங்கலம் வட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கோரிக்கை மனு கொடுத்த 32 வீடு இல்லாத ஏழை, எளிய கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்ப தாகவும், அதற்கான சந்திப்பு கூட்ட த்தை ஏப்ரல் 10 அன்று மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் என்றும் வட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.