நாகர்கோவில், மார்ச் 22- கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோட்டில் மாணவிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். திருவிதாங்கோடு முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏராளமான முஸ்லிம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். திங்களன்று கல்லூரிக்கு வந்த மாணவிகள் திடீரென வகுப்பை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணிவது தங்களது உரிமை என முழக்கமிட்ட மாணவிகள் இது தொடர்பான பதாகைகளையும் ஏந்தியிருந்த னர். மாணவிகளுக்கு ஆதரவாக மத வேறு பாடின்றி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.