districts

img

சாம்சங் போராட்டம்: நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக செயல்படும் தமிழக காவல்துறை

சாம்சங் தொழிலாளர்கள் போராட எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக செயல்படும் காவல்துறையில் செயல் தொழிலாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய தமிழக காவல்துறை, தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும், சாம்சங் தொழிலாளர்கள் தனிநபர் ஒருவரின் இடத்தில் அனுமதியோடு அமைந்திருந்த போராட்ட பந்தலையும் இரவோடு இரவோடு பிரித்து காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் தங்களின் தொழிற்சங்க உரிமைக்காக போராடுவது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சிஐடியு, தொழிலாளர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், சாம்சங் ஆலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைதியான முறையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என்று கூறி ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் போராட்ட பகுதிக்கு சாம்சங் தொழிலாளர்களை வரவிடாமல் தமிழக காவல்துறை தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தப்பிறகும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தமிழக காவல்துறை செயல்படுவது தொழிலாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது