கள்ளக்குறிச்சி, நவ. 17- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினசரி திறக்காமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அலுவலகத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.