districts

img

சாதி சான்று: 7 ஆண்டுகளாக போராடும் பெண்

கள்ளக்குறிச்சி, பிப். 8- உளுந்தூர்பேட்டை அருகே கூ.மேட்டுப்பாளை யம் பகுதியைச் சேர்ந்த வீரமணிகண்டன். இவரது மனைவி முத்துமாரி (31). இவர் தனது கணவர் மற்றும் 3 மகன்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் சாதி சான்று கோரி மனு அளிக்க வந்தார். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆட்சியரிடம் மனு அளிக்க இயலாது. எனவே இங்கு  வைக்கப்பட்டுள்ள பெட்டி யில் மனுவை போடுமாறு கூறினர். பெட்டியில் போட மறுத்த  முத்துமாரி நான் சாதி சான்று கேட்டு கடந்த 7 ஆண்டு களாக போராடி வருகிறேன். எனவே ஆட்சியரை நேரடி யாக சந்தித்து மனு அளிக்க  வேண்டும் என பிடிவாத மாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் ஷபி என்பவரை சந்திக்க அனுமதி அளித்த னர்.  அப்போது அவரிடம் முத்துமாரி கூறுகையில், “நாங்கள் 33 ஆண்டுகளாக கூ.மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறோம், கணவர் கூலி வேலை செய்து  வருகிறார். நாங்கள் மலைக்குறவன் சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஆண்டிக்குழி கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த  இடம் எஸ்.டி. பிரிவின ருக்கு ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ளது. நான் 12ஆம்  வகுப்பு வரை படித்துள் ளேன். இதனால் கிராம உதவி யாளர் பதவிக்கு விண்ணப் பித்துள்ளேன். ஆனால் எனக்கு சாதி சான்று இல்லாததால் என்னு டைய மனு நிராகரித்து விடு வார்களோ என அச்சமாக உள்ளது. எனவே நான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சாதி சான்று கோரி மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார். அதற்கு ஆட்சியரின் உதவியாளர் உளுந்தூர் பேட்டை தாலுக்கா அலுவல கத்தில் உள்ள பொதுசேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறும், அவ்வாறு விண்ணப்பித்தால் உங்களுக்கு சாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தார். இதையடுத்து முத்துமாரி தனக்கும், கணவர் மற்றும் 3 மகன்கள் உள்ளிட்ட 5 பேருக்கும் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார்.