districts

வேளாண் படிப்புக்கு  தரவரிசை பட்டியல் வெளியீடு

சிதம்பரம், டிச. 23- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு 2022 - 23ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்ட படிப்புக ளுக்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை துணைவேந்தர் இராம.கதிரேசன் வெளியிட்டார். மேலும் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ள கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த 2.1.2023 அன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பற்றிய விவரங் களை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குனர் மணிவாசகம், துணை  இயக்குநர் பாஸ்கர்,, மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.