சிதம்பரம், ஏப். 4- தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் நடை பெற்று வரும் அண்ணா குளம் சீரமைப்பு பணியை ஆய்வு செய்தார். அதன் பின்னர், ஞானப்பிரகாசர் குளம் தூர் வாரும் பணிகளையம் பார்வை யிட்டார். பிறகு, உழவர் சந்தை யில் காய்கறி மார்கெட் கட்டும் பணியை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர்,“ சிதம்பரம் நகராட்சியில் 33 திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரூ.5 கோடி 60 லட்சத்தில் 6 குளங்கள் தூர் வாரி சீரமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்”என்றார். ரூ.140 கோடியில் சிதம்ப ரம் நகராட்சியில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறவுள்ளது. ரூ.250 கோடியில் சிதம்பரம், அண்ணாமலைநகர் மற்றும் 10 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தற்போது வரைக்கும் ரூ.214 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரம் விரி வாக்கத்திற்காக நான்கு வழி புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புற வழிச்சாலை அமைக்கும் பணி முடிந்ததும் புதிய பேருந்து நிலையப் பணிகளும் விரைவாக முடித்துமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், நகரமன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், பொறியாளர் மகாராஜன், நகரமன்ற மூத்த உறுப்பினர்கள் ரமேஷ், ஜேம்ஸ் விஜயராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.