கடலூர்,ஜன.8- கடலூர் மாவட்டத்தி லுள்ளஅனைத்து அரசியல் கட்சி களின் கூட்டம் திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், காங்கிரஸ் மாநில செயலாளர் ஏ.எஸ். சந்திர சேகரன், மாவட்டத் தலைவர் ராம்ராஜ், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் துணை மேயர் பா.தாமரைச்செல்வன், குடி யிருப்போர் சங்க பொதுச் செய லாளர் எம்.மருதவாணன், சிபிஎம் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், சிபிஐ நகர செய லாளர் நாகராஜ். திராவிட கழக மாவட்ட செயலாளர் சிவகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில மாணவ அணி செயலாளர் அருள் பாபு, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ரஹிம், நகர தலைவர் ஷேக், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, பொதுநல அமைப்பு நிர்வாகி குரு ராம லிங்கம், குடியிருப்போர் சங்கம் நிர்வாகிகள் தேவநாதன், பாலு, பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கொரோனா ஊரடங்குக்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன. கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி, காரைக் கால் விரைவு ரயில்கள் தற்போது நிற்பதில்லை.
இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் பாதிக்கின்றனர். எனவே, மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். ராமேஸ்வரம், உழவன் எக்ஸ்பிரஸ், திருப்பதி ரயில்க ளும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். கன்னியாகுமரி-புதுச்சேரி மஹால் எக்ஸ்பிரஸ் ரயிலும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். சேலம்-விருதாச்சலம் விரைவு ரயில் கடலூர் துறை முக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடு துறையிலிருந்து கோவை வரை இயக்கப்படும் ஜன சதாப்தி விரைவு ரயில் கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து மைசூர்க்கு இயக்கப்படும் விரைவு ரயில் கடலூர் துறை முகம் சந்திப்பு வரை நீட்டிக்க வும், விழுப்புரம்- தாம்பரம் பாசஞ்சர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடலூர் - புதுவை - சென்னை இருப்பு பாதை திட்டத்தை உருவாக்க வேண்டும். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நடை மேடை முழுவதும் மேல் கூரை இல்லாமல் உள்ளது. குடிநீர், கழிப்பறை, பயணிகள் தங்கும் அறைகளும், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வந்து செல்வதற்கான வசதி கள் கிடையாது. இவை அனைத்தை யும் நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரி 24 அன்று காலை 10 மணிக்கு திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தை விளக்கி ஜனவரி 19 அன்று கடலூர் நகரம் முழுவதும் தெரு முனை கூட்டம் பிரச்சாரம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.