districts

img

வியாபாரிகளின் நெல்களுக்கே அதிகாரிகள் முக்கியத்துவம் விவசாயிகள் குற்றச்சாட்டு

கோபி, ஜன.12- கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு நெல் கொள்மு தல் நிலையங்களில், விவசாயிக ளின் நெல்களை கொள்முதல் செய் யப்படுவதில்லை எனவும், வியா பாரிகளின் நெல்களுக்கே முக்கி யத்துவம் கொடுப்பதாகவும் விவசா யிகள் குற்றச்சாட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட் டிபாளையம் சுற்றுப்பகுதியில் செல்லும் தடப்பள்ளி அரக்கன் கோட்டை மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார்  40 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறு வடைப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதனால், தமிழக அரசு வாணிபக் கழகத்தின் சார்பில்  22 இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக் கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது.  கடந்த ஒருவார காலமாக தொடர் மழையினால் அறுவடைப்  பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அறுவடை செய்யப் பட்டு நெல்கள் அரசு நெல் கொள்மு தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அதி காரிகள் சரிவர நெல்களை கொள்மு தல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், நெல்கள் மழையில் நனைந்து சேதமடைந் துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், வெளிமாவட் டங்களிலிருந்து வியாபாரிகள் கொண்டு வரும் நெல்களுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுப்பதா கவும் விவசாயிகள் புகார் தெரி வித்தனர்.  இதுகுறித்து வருவாய்துறை, நுகர்பொருள் வாணிபக்கழகம், காவல்துறையினருக்கு பலமுறை  புகார் அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ள னர். எனவே, விவசாயிகளின் வாழ் வாதாரம் காக்க அரசு நெல் கொள்மு தல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை 5 நாட்க ளுக்குள் கொள்முதல் செய்ய வேண் டும். வியாபாரிகள் கொண்டு வரும் நெல்களை முறைகேடாக கொள்முதல் செய்யும் அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்களுக்கு ஒரு வார காலத்திற்குள் வங்கியில் பணம்  செலுத்த வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளனர்.