திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவரின் காரை மடக்கி சோதனையிட்டனர்.
அப்போது, அந்த அதிகாரியிடம் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மருத்துவர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்று தப்பிச் செல்லும்போது லஞ்ச ஒழிப்புத்துறை மடக்கிப் பிடித்தது தெரியவந்தது.
வாகன சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரியிடம் ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.