திண்டுக்கல், பிப்.10- 3 ஆண்டுகளாக தேர்தல் டெபாசிட் தொகையை திருப்பித் தராமல் மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடிப்பது தொ டர்பாக திண்டுக்கல் சட்டமன்றத் தொகு தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளராக போட்டியிட்ட என்.பாண்டி திண்டுக்கல் ஆட்சியருக்கு நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு: கடந்த 2021 ஆம் ஆண்டில் நடை பெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்த லில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக என்.பாண்டி வேட்பாளராக போட்டியிட்டார். இதற்காக டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்தி யுள்ளார். தேர்தல் முடிவின் அடிப்படை யில் வேட்பாளர் என்.பாண்டி தனது டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரி திருப்பித் தரவில்லை. இந்த டெபாசிட் தொகையை திருப்பித் தர வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை 9 ஆம் தேதி தேர்தல நடத்தும் அலுவலரான திண்டுக்கல் கோட்டாட்சியருக்கு கடிதம் எழுதினார். ஆனால் டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படவில்லை. இதனையடுத்து 2022 ஜுன் 6 ஆம் தேதி கோட்டாட்சிய ருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதினார். இதுதொடர்பாக பல முறை நேரில் சென்று கேட்டும் கொடுக் காமல் அலைக்கழித்து வந்தனர். இந்நிலையில் 3 ஆண்டுகள் கழிந்த பின்பும் டெபாசிட் தொகை கிடைக்காத தால் தற்போது மீண்டும் தனது டெபா சிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் ஆட்சியருக்கு என்.பாண்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடித நகல் மாநில தேர்தல் ஆணையருக்கும் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தின் மீது உரிய நடவ டிக்கை எடுத்து டெபாசிட் தொகை கிடைக்கவில்லை என்றால் சட்டரீதி யான நடவடிக்கை எடுக்கப்போவதா கவும் என்.பாண்டி தெரிவித்துள்ளார்.