districts

img

குழந்தை தொழிலாளர் திட்டத்திற்கு மூடுவிழா செய்வதா? ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

தருமபுரி ஜூன் 15-  தேசிய குழந்தை தொழிலாளர் திட் டத்திற்கு மூடுவிழா காணும் நோக்கில் இத்திட்ட பள்ளி ஆசிரியர்களை பணி  நிறுத்தம் செய்ததை கண்டித்து தரும புரியில் புதனன்று சிஐடியுவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் சமையலர் என சுமார் 50 பேர் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மாத ஊதியமாக பெற்று வந்த னர்.  இதுவரை சுமார் 17 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பள்ளி இடைநின்ற மாணவர் கள் மற்றும் குழந்தை தொழிலாளர் களை‌ மீட்டு கல்வி கற்றுக்கொடுத்துள் ளனர். இந்நிலையில், இந்த தேசிய  குழந்தை தொழிலாளர் திட்டத்தை எஸ்.எஸ்.ஏ திட்டத்துடன் ஒன்றிய அரசு இணைந்துள்ளது. இதன் காரண மாக இந்த திட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர் கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட் டுள்ளனர். ஒன்றிய அரசு மீண்டும் தேசிய குழந்தை தொழிலாளர் திட் டத்தை துவக்கிட வேண்டும், ஆசிரியர் கள், ஊழியர்களுக்கு பணிகள் வழங் கிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தேசிய குழந்தை தொழி லாளர் திட்ட பள்ளி ஆசிரியர் ஒருங் கிணைப்பாளர் அம்பிகா தலைமை  தாங்கினார். இதில், சிஐடியு மாவட்ட  செயலாளர் சி.நாகராசன், மாவட்ட  பொருளாளர் ஏ.தெய்வாணை, மாநி லக்குழு உறுப்பினர்கள் சி.கலாவதி, சி. அங்கம்மாள், சிஐடியு மாவட்ட  துணைத்தலைவர் பி.ஆறுமுகம், இணைச்செயலாளர் செல்வம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளி  ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ராதா, கணேசன், முணியப்பன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.