கோபி, செப். 12- கோபியில் கிராம உதவியாளர் களை கட்டாயப் பணிகளில் ஈடுபடுத்து வதை கண்டித்து கிராம உதவியாளர் கள் சங்கம் சார்பில் 150க்கும் மேற்பட் டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கோபி கோட் டாச்சியர் அலுவலகம் முன்பு கிராம உத வியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் குருநாதன் தலைமையில் கோபி வட்ட செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஈஸ்வரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் ராஜசேகர் பங்கேற் றார். இதில், ஈரோடு மாவட்டத்தில் வட் டாச்சியர் அலுவலகங்களில் கிராம உத வியாளர்களை இரவு காவல் பணி, டிஜி டல் கிராப் சர்வே பணி உள்ளிட்ட பல் வேறு பணிகளை மேற்கொள்ள கட்டா யப்படுத்தப்படுகிறது. மேலும், பணிக்கு வராத கிராம உதவியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என மிரட்டி வரு கின்றனர். இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும் எனவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தியூர், பவானி, கோபி, நம்பியூர், சத்தி, தாள வாடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர் கள் கலந்து கொண்டனர்.