ஜிஎஸ்டி குளறுபடிகளை விமர்சித்த அன்னபூர்ணா ஹோட் டல் உரிமையாளர் சீனிவாசனை மிரட்டும் ஒன்றிய நிதியமைச்சருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஒன்றிய நிதியமைச்சருடன் நடந்த சந்திப்பில், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார். இவ்வாறு ‘நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைப்பது மரபு தானே?’ என்று கூறியிருக்கும் கே. பாலகிருஷ்ணன், “அந்த வீடியோ வெளியானதும், பலரும் அன்னபூர்ணா சீனிவாசனின் கருத்துக்களை ஆமோதித்தனர். இது பாஜகவுக்கு எரிச்சலைக் கிளப்பி யது. நடைமுறை அனுபவத்தில் இருந்து எழுப்பப்பட்ட அவருடைய கேள்விக்கு பதில் சொல்வதும், வரி விதிப்பில் நிலவும் குளறுபடிகளைத் திருத்திக் கொள்வதுமே ஜனநாயகம்.
ஆனால், கேள்வி கேட்பவரை மிரட்டுவது, வாயடைப்பது, மன்னிப்பு கேட்கச் செய்வது என்பது எதேச்சதிகாரம். மேலிருந்து, அடி வரை தொடரும் இந்த ஆணவம் வன்மை யான கண்டனத்துக்குரியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.