திருப்பூர், ஜூன் 25 - திருப்பூரில் இந்து முன்னணி யைச் சேர்ந்த பைனான்சியர் புத னன்று அதிகாலை ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பதவி பறிபோனதால் முன்னாள் நிர்வாகி இவரைக் கொலை செய்ததாக காவல் துறை முதல் கட்ட விசா ரணையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் குமாரனந்தபுரம் காம ராஜர் வீதியில் வசித்து வந்தவர் பாலமுருகன் (30). நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன் றிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலமுருகனுக்கு திரு மணம் நடந்தது. இந்நிலையில் புத னன்று அதிகாலை வரை அப்பகுதி யில் பாலமுருகன் நண்பர்களுட இருந்திருக்கிறார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற நிலையில் மீண் டும் நண்பர்கள் பாலமுருகனை அலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர். அவர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்த னர். மாநகர காவல் துணை ஆணை யர் பிரவின்கவுதம் தலைமையில் போலீஸார் விசாரணை மேற் கொண்டனர். கொலையாளி களைக் கண்டுபிடிக்க 3 தனிப்படை கள் அமைக்கப்பட்டு மாநகரின் பல் வேறு இடங்களில் விசாரிக்கப்பட் டது. இவர் கொலை செய்யப்பட்ட போது உடனிருந்த நண்பர்கள் மூன்று பேரிடம் போலீஸார் முதல் கட்டமாக விசாரித்தனர். இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “இந்து முன்னணி யில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த நீக்கப்பட்ட குமரானந்த புரத்தை சேர்ந்த சுமன் (34) மற்றும் பாலமுருகனுக்கு இடையே பதவி வகிப்பது தொடர்பாக விரோதம் எழுந்தது. பதவியில் இருந்து நீக் கப்பட்ட சுமன் ஐஜேகே கட்சியில் சேர்ந்திருக்கிறார். பதவி பறிபோன ஆத்திரத்தில் இருந்த சுமன், பால முருகனை கொலை செய்ய திட்ட மிட்டிருப்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந் தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் சுமனை கேரள மாநிலம் பாலக்காட்டில் பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். அதே போல் இந்த கொலையில் சம்பந்தப் பட்ட நரசிம்ம பிரவின் (29) என்ப வரை தேடி வருவதாகத் தெரிவித்த னர். பைனான்சியராக பாலமுருகன் இருந்ததால் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தொடக்கத்தில்,கூறப்பட்டது. இந்து முன்னணி பதவி பிரச்சனை யில், அதிகாரத்திற்கான போட்டி யில் ஒரே அமைப்பில் இருந்தவர் களே படுகொலையை நிகழ்த்தியி ருப்பது காவல் துறை விசாரணை யில் தெரிய வந்தது. சுமன் என்பவரு டன் அவரது நண்பர் தமிழரசனை யும் காவல் துறையினர் கைது செய் துள்ளனர். தலைமறைவாக உள்ள நரசிம்ம பிரவின் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரை காவலர்கள் தேடி வருகின்றனர். இதனிடையே, இந்து முன்னணி மற்றும் பாஜகவினர், பாலமுருகன் படுகொலைக்கு உள்நோக்கம் கற் பித்து மறியல் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டனர். இந்நிலை யில், எப்போதும் போலவே இந்த குற்றச்சம்பவத்திலும், பதவி போட்டியில் கொலை செய்யப்பட் டுள்ளதை போலீசார் துரித விசா ரணையில் கண்டறிந்து நடவ டிக்கை எடுத்துள்ளனர்.